பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் பாலம் சுத்தப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள பாலத்தின் தென்பகுதியில் வாய்க்கால் மற்றும் வடிகால் பாலத்தை சுத்தப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.கிணத்துக்கடவு - காட்டம்பட்டி செல்லும் ரோட்டில், ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தை ஒட்டி, தென்பகுதியில் மழை நீர் வடிந்து செல்வதற்காக சிறு வாய்க்கால் மற்றும், வடிகால் பாலம் கட்டப்பட்டது.இதனை சுற்றிலும், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், வாய்க்கால், பாலம் இருப்பதே தெரியாமல் உள்ளது. மழை நீர் வழிந்து செல்வதும் தடைபட்டுள்ளது.பருவமழை துவங்கியுள்ளதால், மழை நீர் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை சரி செய்ய ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செடி, கொடிகளை அகற்றி வாய்க்கால், வடிகால் பாலத்தை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X