மண் கலந்த குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய் அபாயம் | Dinamalar

மண் கலந்த குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய் அபாயம்

Added : ஜூலை 25, 2020
Share
குன்னுார்:ஜெகதளா பேரூராட்சியில், குடிநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வினியோகிப்பதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.குன்னுார் அருகே, உள்ள ஜெகதளா பேரூராட்சி, கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்டுள்ளது. இங்கு 2015ம் ஆண்டில், 1.68 கோடி ரூபாய் மதிப்பில், லக்குமனை குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. அதில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.இந்நிலையில், சமீபத்தில்
 மண் கலந்த குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய் அபாயம்

குன்னுார்:ஜெகதளா பேரூராட்சியில், குடிநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வினியோகிப்பதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.குன்னுார் அருகே, உள்ள ஜெகதளா பேரூராட்சி, கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்டுள்ளது. இங்கு 2015ம் ஆண்டில், 1.68 கோடி ரூபாய் மதிப்பில், லக்குமனை குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. அதில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை.இந்நிலையில், சமீபத்தில் பல லட்சங்கள் செலவு செய்து, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த, 4 குடிநீர் தொட்டிகளை இடித்து, அதே இடத்தில் ஒரே குடிநீர் தொட்டி மட்டும் கட்டப்பட்டது.இதனால், தற்போது வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், மண் கலந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X