'குடி'மகன்கள் அட்டகாசம்: பொதுமக்கள் திண்டாட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை ராஜலட்சுமி நகரில் மீண்டும் 'குடிமகன்'களின் அட்டகாசம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியிழந்துள்ளனர்.உடுமலை, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட் பின்புறம் உள்ள ராஜலட்சுமி நகரில் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளியின் எதிர்புறம், முள் செடிகள் நிறைந்து புதர் மண்டி கிடக்கிறது.முறைகேடாக அங்கு சிலர் மதுவிற்பனை செய்கின்றனர். குடிமகன்கள் பள்ளி சுற்றுப்பகுதி என்றும் பாராமல், அவ்விடத்தை 'பார்ராக' பயன்படுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது.அருகிலுள்ள குடியிருப்பு மக்களும் இப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை புகார் அளித்தும், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.கடந்தாண்டு பள்ளி நிர்வாகத்தினரின் முயற்சியால், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதனால் தற்காலிகமாக 'குடிமகன்கள்' தொல்லை இல்லாமல் இருந்தது.தற்போது, கொரோனா ஊரடங்கினால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது 'குடிமகன்'களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி அருகே நடக்கும் மதுவிற்பனையை கட்டுப்படுத்த உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X