ஆயுத கட்டுப்பாடு: அமெரிக்கா - ரஷ்யா பேச்சு| Trump talks arms control in phone call with Putin | Dinamalar

ஆயுத கட்டுப்பாடு: அமெரிக்கா - ரஷ்யா பேச்சு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (5)
Share
trump, donald trump, russia, putin, us russia, ஆயுத கட்டுப்பாடு: அமெரிக்கா - ரஷ்யா பேச்சு


மாஸ்கோ :ஆயுத கட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும், தொலைபேசியில் உரையாடினர்.அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், 2021, பிப்ரவரியில் காலாவதியாகிறது. இதை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க, ரஷ்யா விரும்புகிறது. ஆனால், டிரம்ப் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த ஒப்பந்தம் காலாவதியானால், முதன்முறையாக, ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்கா, ரஷ்யா நாடுகளின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த எந்தவொரு சட்டமும் இல்லாத நிலை ஏற்படும்.


latest tamil news
இந்நிலையில், டிரம்ப் - புடின் இருவரும், தொலைபேசியில், ஆயுத கட்டுப்பாடு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து பேசியது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.'சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பு, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்கு உள்ளது. எனவே, புதிய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாகவும், கொரோனா தடுப்பில் இணைந்து செயல்படுவது குறித்தும், இருநாட்டு அதிபர்கள் பேசினர். ஈரான் அணு ஆயுத பிரச்னையும், பேச்சில் இடம் பெற்றது' என, ரஷ்யா தெரிவித்துள்ளது.இதற்கிடையே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இடையே ஆயுதப் போட்டி இருப்பதை, அதிபர் டிரம்ப் விரும்பவில்லை. இதையடுத்து, விரைவில் வியன்னாவில் நடைபெற உள்ள ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மீது அமெரிக்கா குற்றச்சாட்டுரஷ்யா, கடந்த வாரம், ஒரு சிறிய விண்கலம் மூலம், விண்வெளியில் உள்ள தன் செயற்கை கோள் ஒன்றை, நெருக்கத்தில் ஆராய்ந்தது. இதற்கு, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விண்ணில் ஆயுதங்களை குவித்து, அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளின் செயற்கைக் கோள்களை மிரட்ட வேண்டும் என்ற ரஷ்யாவின் நோக்கம் அம்பலமாகியுள்ளதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், அமெரிக்காவின் செயற்கைக் கோள் அருகில், ரஷ்ய உளவு செயற்கைக் கோள் சென்று தகவல்களை சேகரித்ததாக, அமெரிக்க விண்வெளி படைத் தலைவர், ஜெனரல் ஜான் ரேமண்ட் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X