பொது செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்திமலையில் பூங்கா திட்டம் என்னாச்சு! திட்ட மதிப்பீடு மட்டும் பல முறை திருத்தியாச்சு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 திருமூர்த்திமலையில் பூங்கா திட்டம் என்னாச்சு!  திட்ட மதிப்பீடு மட்டும் பல முறை திருத்தியாச்சு

உடுமலை:திருமூர்த்தி அணை கரையில் பூங்கா அமைத்தல் உட்பட சுற்றுலா மேம்பாட்டுக்கு அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், உடுமலை பகுதி மக்கள் அதிருப்தியில், உள்ளனர்.உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. மலைமேல், 960 மீட்டர் உயரத்தில், மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது, மலையடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள, பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேலும், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன்காட்சியகம், காண்டூர் கால்வாய் என சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திருமூர்த்திமலையில், சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.குறிப்பாக, திருமூர்த்தி அணையின் கரையில், பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு,, ஆண்டுதோறும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்படுகிறது. அப்பகுதியில், 1,700 மீட்டர் நீளத்திற்கு, முட்புதர்களை அகற்றி, பூங்கா அமைக்க, 15 ஆண்டுகளாக திட்ட வடிவமைப்பு, தயாரிக்கப்பட்டு, அரசுக்கு, நிதி ஒதுக்கீடு கேட்டு, அனுப்பப்படுகிறது.அவ்வகையில், 45 லட்சம் ரூபாயாக இருந்த, திட்ட மதிப்பீடு, இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.திருமூர்த்திமலையில், முன்பு, நடந்த ஆடிப்பெருந்திருவிழாவிலும், பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை, கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வெளியிட்டனர். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.கொரோனா ஊரடங்கு காலத்தில், பூங்கா அமைப்பதற்கான பணிகளை துவக்கினால், பயனுள்ளதாக இருக்கும் என உடுமலை பகுதி மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, உடுமலை பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X