அவசரத்துக்கு உதவாத ஏ.டி.எம்.,கள்: கிராம வாடிக்கையாளர் அலைமோதல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்கள் செயல்படாமல் உள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், வங்கிகளில் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதால், வங்கி பரிவர்த்தனைகள், கணினி மயமாகி விட்டன. வங்கிகள் சார்பில், ஏ.டி.எம்.,கள் துவங்கப்பட்டு, வங்கிக் கணக்கில் பணம் எடுப்பது எளிதாகியுள்ளது.நகர் பகுதிகளில் மட்டுமே ஏ.டி.எம்.,களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சமீபகாலமாக, புறநகர்கள், நெடுஞ்சாலையிலுள்ள பெட்ரோல் பங்க்கள், கிராமங்களிலும் ஏ.டி.எம்.,கள் துவங்கப்பட்டன.கிராமப்புற ஏ.டி.எம்., மையங்கள், நாளடைவில் பராமரிப்பின்றியும், பணம் நிரப்பாமலும் விடப்பட்டன. ஏ.டி.எம்.,களை பயன்படுத்தி பழகிய மக்கள், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.ஆச்சிப்பட்டியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்., மையம், சில வாரங்களாக பூட்டியே கிடக்கிறது. சின்னாம்பாளையத்திலுள்ள ஏ.டி.எம்., மையத்தில், பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம், வங்கி நேரம் முடிந்ததும் பூட்டப்படுகிறது.இதேபோன்று, பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைகள் புறநகர் மற்றும் கிராமங்களில் முடங்கியுள்ளன. அனைத்து சேவைக்கும் கட்டணமும், ஏ.டி.எம்., வசதிக்கு ஆண்டு கட்டணமும் வசூலிக்கும் வங்கிகள், அதற்கான வசதியை செய்து கொடுக்க தவறுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X