வேலை உறுதி திட்டத்தில் சமூக இடைவெளி இல்லை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஊராட்சிகளில், வேலை உறுதி திட்டத்தில் சமூக விலகல் இன்றி பயனாளிகள் கூட்டமாக பணிபுரிவதால், கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட, 34 ஊராட்சிகளில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ரோடு, குளம், குட்டை பகுதிகளில் பயனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊராட்சிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகள், விதிமுறைகளை கடைபிடிக்காமல் கூட்டமாக பணியில் ஈடுபடுகின்றனர்.கொண்டம்பட்டியில் துாய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளார். இதனை கருத்தில் கொள்ளாமல், பயானாளிகள் சமூக விலகல் இன்றி அமர்வதும், வேலை செய்வதுமாக உள்ளனர். இதனால், ஊராட்சிகளில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒன்றிய அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X