பொது செய்தி

தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் பருவமழை சோலையாறில் 143 மி.மீ., பதிவு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில் பெய்யும் மழையால், சோலையாறு அணைப்பகுதியில், 143 மி.மீ., மழையளவு பதிவானது.வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையினால், சிறுவர்பூங்கா குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வால்பாறை - சோலையாறு அணை ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டது. கனமழையால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அக்காமலை செக்டேம், தொடர்ந்து, 20வது நாளாக நிரம்பிய நிலையில் காணப்படுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கனமழை பெய்து வரும் நிலையில், மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 423 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 93 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 111.17 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,125 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,247 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 143, வால்பாறை - 67, மேல்நீராறு - 71, கீழ்நீராறு - 85, காடம்பாறை - 8, மேல்ஆழியாறு - 8, ஆழியாறு - 21, பரம்பிக்குளம் - 47, துாணக்கடவு - 8, மணக்கடவு - 4, வேட்டைக்காரன்புதுார் - 7, பெருவாரிப்பள்ளம் - 10, சர்க்கார்பதி - 16, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X