பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை உற்பத்திக்கு இருப்பு வைப்பு: தேங்காய்களை உரிக்கும் பணி தீவிரம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 கொப்பரை உற்பத்திக்கு இருப்பு வைப்பு: தேங்காய்களை உரிக்கும் பணி தீவிரம்

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காயை உலர்களங்களில், கொப்பரையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், பருவமழை, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால், கொப்பரை வர்த்தகத்தில், மந்த நிலை இருந்தது. தற்போது, மீண்டும், கொப்பரை வர்த்தகம் தீவிரமடைந்துள்ளது. தரத்தின் அடிப்படையில், கிலோ 99 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.தேங்காய் பச்சை டன், 29 ஆயிரம் ரூபாய்க்கும், தேங்காய் கருப்பு டன், 31 ஆயிரம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்யபப்படுகிறது. நிலையான விலை உட்பட காரணங்களால், இருப்பு வைத்த தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். உலர் களங்களிலும், தேங்காயை உரித்து, பருப்பை பிரித்தெடுக்கும் பணியில், அதிகளவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கொப்பரை விலை நிலையாக இருக்க, அரசு அறிவித்தபடி, கொள்முதல் நிலையங்களை உடனடியாக துவக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X