பொது செய்தி

தமிழ்நாடு

வேலியில் பல வகை மரக்கன்று தோட்டக்கலைத்துறை அறிவுரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

உடுமலை:விளைநிலங்களின் வேலியில் பல்வேறு வகை மரங்களை நடவு செய்ய தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாய சாகுபடிக்கு, வடகிழக்கு பருவமழை முக்கிய ஆதாரமாக உள்ளது. தோட்டக்கலைத்துறைத்துறையினர் கூறியதாவது: விளைநிலங்களில், மழை நீரை ஆதாரமாகக்கொண்டு வேலிப்பகுதியில், பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்யலாம்.கொடுக்காப்புளி, இலவன், சீதா, கிளாக்காய், பூவரசு, மூங்கில், புளி, விளா, இலந்தை, வேம்பு, கருவேல், சூபாபுல், கிளைரிசிடியா, புங்கன், இலுப்பை, அரிதாக கிடைக்கும், முள் சீதா மற்றும் சப்போட்டா, கொய்யா, நெல்லி ஆகிய மரக்கன்றுகளை மண் வகை அடிப்படையில் நடவு செய்யலாம். தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளிலும், மழை நீரை பயன்படுத்தி, மரக்கன்றுகள் வளரும் வாய்ப்புள்ளது. நடவிற்கு முன், மரக்கன்றுகள் விரைவில், வளரும் சூழலை உருவாக்க வேண்டும்.நிலத்தை சமப்படுத்தி, ஆழமாக குழிகள் எடுத்து, கலவைப்பொருட்களை குழிக்குள் போட வேண்டும். மண் புழு உரம், செம்மண், மணல், நன்கு மட்கிய தொழு உரம், வேப்பம்புண்ணாக்கு, உயிர் உரங்கள், இதர நுண்சத்துகளை மண் பரிசோதனை அடிப்படையில், மரக்கன்று நடுவதற்கு முன்பு இட வேண்டும்.எந்த தாவரத்தையும், தீ வைத்து அழிக்காமல், அவற்றை துாளாக்கி, மண்ணில் போட்டு மூடினால், அது உரமாக மாறி விடும். இவ்வாறு, வறட்சி காலத்தில் கழிவுகளை உரமாக்கி, மழைக்காலத்தில், வேலிகளில், மரக்கன்றுகள் நடுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X