பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால காய்ச்சல், சளிக்கு வீட்டு வைத்தியம்: மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:மழைக்காலத்தில் ஏற்படும் உடல் நலப்பிரச்னைகளுக்கு, வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்கிறது. கனமழை, கடும் வெயில், குளுகுளு வானிலை என, மாறி மாறி நிலவுவதால், காய்ச்சல், சளி, தலைவலி என, வழக்கமாக உடல்உபாதைகள் மக்களுக்கு ஏற்பட துவங்கியுள்ளது.இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் போது, கொரோனா அறிகுறியா என, அச்சத்தை ஏற்படுத்தி பரிசோதனைக்கு வலியுறுத்துகின்றனர்.இதனால், மருத்துவமனை செல்ல மக்களுக்கு தயக்கம் உள்ளது. எனவே, பாரம்பரிய வீட்டு வைத்தியத்தில், மழைக்கால நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை எடுக்க துவங்கியுள்ளனர்.இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள மருத்துவ குறிப்புகள் மக்களுக்கு கைகொடுக்கின்றன. காய்ச்சல், சளி, தொண்டையில் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால், மஞ்சள் துாள் கலந்த பாலை அடிக்கடி பருக வேண்டும். சிறந்த கிருமிநாசினியான மஞ்சள், நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து, நோய் பாதிப்பில் இருந்து காக்கிறது.சூடான தண்ணீரில் தேயிலை எண்ணெய், புதினா, ஓமம் இவ்வற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டு, ஆவி பிடித்தால், தலையில் சேர்ந்துள்ள தேவையில்லாத நீர் வெளியேறிவிடும்.புதினா, ஓம இலை மற்றும் யூகலிப்டஸ் இலைகளை சேர்த்து அரைத்து களிம்பு செய்து, தொண்டையில் தடவி வந்தால், தொண்டை அடைப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவை மூன்றும் கலந்த களிம்பு ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது என, ஆயுஷ் அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மருத்துவ குறிப்புகள் மக்களுக்கு கைகொடுக்கின்றன.அதே நேரத்தில், தலைவலி, சுவாசப்பிரச்னை, உடல் வலி, இருமல், மூக்கு அடைப்பு, சளி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X