சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி - போடிபாளையம் ரோட்டில், மேற்கு ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திக்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த 'மாருதி 800' காரை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. கார் மற்றும், 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.காரில் வந்த பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சி.டி.சி., காலனியை சேர்ந்த பாரூக், 38, கேரள மாநிலம் மூலக்கடை வண்ணாமடையை சேர்ந்த மணி, 40, ஆகியோரை கைது செய்தனர்.இதேபோன்று, நஞ்சேகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப் அருகே மொபட்டில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற, வண்ணாமடையை சேர்ந்த அப்துல் ஜாபர்,43, என்பவரை கைது செய்து, மொபட் மற்றும் 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'வாகன சோதனையில், ஆயிரத்து, 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X