பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா: குணமடைந்த 25 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது; குணமடைந்த, 25 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 600 ஆக இருந்தது; ஒருவர் பிற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார். நேற்று, 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 25 பேர் குணமாகி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.திருப்பூர் - 12 , குன்னத்துார் -2, பல்லடம் -2, அவிநாசி மற்றும் தாராபுரத்தில் தலா ஒருவர் என, 18 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது.மொத்த கொரோனா பாதிப்பு 617 ஆக உயர்ந்துள்ளது; 325 பேர் குணமடைந்துள்ளனர்; 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X