பொது செய்தி

தமிழ்நாடு

3,000 நெருங்கும் கொரோனா தொற்று! கோவையில் நேற்று 189 பேர் பாதிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் நேற்று ஒரே நாளில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,966 ஆக உயர்ந்தது.கோவை வெள்ளலுார் அதிவிரைவு படையில் ஏற்கனவே, ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நியூ சித்தாபுதுார் சி.கே.காலனியில் 7 பேர், வீரகேரளம் பகுதியில் 6 பேர், அன்னுார் குமாரபாளையம் ரோடு அம்மணிஅருணா நகரில் 5 பேர், ராஜேஸ்வரி நகரில் 4, புலியகுளம் 3, வி.ஜி.புரம் எஸ்.பி.காலனியில் 3, கீரணத்தம் கள்ளக்குழி 3, இருகூர் பூங்கா நகரில் 3, சூலுார் ரங்கநாதபுரத்தில் 2 பேர் உட்பட மொத்தம், 189 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 2,966 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்று மூவாயிரத்தை நெருங்குவதால், முழு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இருவர் உயிரிழப்புஉக்கடம் பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், கல்லீரல் பாதிப்புடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆலாந்துறையை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததார், கோவையில் இறப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் நேற்று இறந்தார்.196 பேர் 'டிஸ்சார்ஜ்' கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 196 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்; 1,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X