பெண் ஊழியருக்கு தொற்று நகராட்சி அலுவலகம் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் ஊழியருக்கு தொற்று நகராட்சி அலுவலகம் மூடல்

Added : ஜூலை 25, 2020
Share
குன்னுார்:ஊழியருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டதால், குன்னுார் நகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் மூடப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி அலுவலகத்தை சேர்ந்த, 40 வயது பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் வரி வசூலில் ஈடுபட்டதால், குன்னுார் மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. நகராட்சி அலுவலகமும்

குன்னுார்:ஊழியருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டதால், குன்னுார் நகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் மூடப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி அலுவலகத்தை சேர்ந்த, 40 வயது பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் வரி வசூலில் ஈடுபட்டதால், குன்னுார் மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. நகராட்சி அலுவலகமும் மூடப்பட்டது.காலையில் திறக்கப்பட்ட கடைகள் மதியம், அடைக்கப்பட்டதால், மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு, 'கேட்' பூட்டப்பட்டது. நகராட்சி ஊழியர்கள், மார்க்கெட் வியாபாரிகளுக்கு, பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X