பொது செய்தி

தமிழ்நாடு

தபால்காரரின் சேவைக்கு கவுரவம்:ரூ. 1 லட்சம் வழங்கிய பா.ஜ., எம்.பி.,

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 தபால்காரரின் சேவைக்கு கவுரவம்:ரூ. 1 லட்சம் வழங்கிய பா.ஜ., எம்.பி.,

குன்னுார்:குன்னுார் வனப்பகுதி வழியாக, 15 கி.மீ., நடந்து, தபால் பட்டுவாடா செய்த தபால்காரருக்கு, ராஜ்யசபா எம்.பி., ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி கவுரவித்துள்ளார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் சிவன், 65. தபால்துறையில், 30 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், ஹில்குரோவ் தபால் நிலையத்தில், 10 ஆண்டுகள் கிராம தபால்காரராக இருந்தார். 15 கி.மீ., வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்தே சென்று, தபால்கள், மணியார்டர், பதிவு தபால் பட்டுவாடா செய்தார்.கடந்த, மார்ச், 7ல் ஓய்வு பெற்றார். இவரது சேவை குறித்து, 'தினமலர்' நிஜக்கதையில், ஜூலை, 2ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதை படித்த, 'இன்கோ சர்வ்' மேலாண்மை இயக்குனர் சுப்ரியா சாஹூ, சிவனுக்கு பாராட்டு தெரிவித்து, தனது 'டுவிட்டரில்' பதிவிட்டார்.இதை படித்த, கர்நாடக மாநிலம் ராஜ்யசபா எம்.பி., ராஜிவ் சந்திரசேகர் (பா.ஜ.,) ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி கவுரவிப்பதாக அறிவித்தார். சிவனின், வங்கி கணக்கு எண்ணில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். தன்னை கவுரவித்த எம்.பி.க்கு, சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X