பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயிலில் 1,000 டன் நெல் வரத்து :ரேஷன் வினியோகத்துக்கு ஏற்பாடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 சரக்கு ரயிலில் 1,000 டன் நெல் வரத்து :ரேஷன் வினியோகத்துக்கு ஏற்பாடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சிக்கு சரக்கு ரயிலில் வந்த, 1,000 டன் நெல், அரசு நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, பொது வினியோகத்துக்கு வழங்கப்பட உள்ளது.தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட, 2,000 டன் நெல், நீடாமங்கலத்தில் இருந்து சரக்கு ரயிலில் திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்பட்டது.மொத்தம், 42 வேகன்களில் ஏற்றி வரப்பட்ட நெல், 1,000 டன் கொண்ட, 21 வேகன்களை திண்டுக்கல்லில் பிரித்து விட்டு, மற்ற, 21 வேகன்களுடன் பொள்ளாச்சி வந்தது. பின், 65 லாரிகளில் ஏற்றப்பட்டு, அரசு நவீன அரசு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.'அரிசியாக அரைக்கப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X