பொது செய்தி

தமிழ்நாடு

விதைப்பரிசோதனை அவசியம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:'விதைப்பதற்கு முன், விதைகள் தரமானவையா, என்பதைப் பரிசோதிக்க வேண்டும்'என வேளாண் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். ஆடிப் பட்டத்தையொட்டி, விதைப்புப்பணிகளில், விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் விதைகளைக் கொள்முதல் செய்யும் போது, அவற்றின் தரத்தை அறிந்து கொள்ள முடியும்.விதைப்பதற்கு முன், விதைகள் தரமானவையா, சிறந்தவையா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். சரியான விகிதத்தில் வரையறுக்கப்பட்ட முளைப்புத்திறன், ஈரப்பதம், பிற ரக கலப்பின்மை, பூச்சி நோய் தாக்குதல் இன்மை போன்றவற்றைச் சோதிக்க வேண்டும். விதைப் பரிசோதனை நிலையங்களில், விதை மாதிரிகளை அளித்து தரமானதா என்பதை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X