பொது செய்தி

இந்தியா

இந்தியா வருவோருக்கு இரண்டு கட்ட பரிசோதனை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : பிறநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக தொற்று பரிசோதனை நடத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்துவந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தொற்று பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். அதனால் தற்போது நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருகட்டமாக கொரோனா பரிசோதனையை நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, ஜூலை 17 முதல் அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news



இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியா வரும் பயணிகளுக்கு, அந்த விமானநிலையத்திலேயே தொற்றுக்கான முதல் பரிசோதனை நடத்தப்படும். தொடர்ந்து, அது அவர்களது சொந்த ஊர் மற்றும் மாநிலமாக இருந்தால் அதே பகுதியில் இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்படும். அதன்பின்னர், தனிமைப்படுத்தும் மையத்தில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவர்.


latest tamil news



பயணிகள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களது மாநிலங்களில் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டு, பிறகு குறைந்தது 7 நாட்கள் கட்டாயமாக (வீட்டு தனிமை / முகாம்) தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25-ஜூலை-202019:30:30 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இந்தியாவுக்கு வருபவர்கள் என்றால்? கள்ளக்குடியேறிகள்தானே? CAA என்னங்க அச்ச்சு? கொறன தங்க விலை மாதிரி எறிகிட்டே போகுது..கள்ளக்குடியேறிகளை தடுங்க...கொரநவோடு உள்ளே வர்றணுகலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X