பொது செய்தி

இந்தியா

உயிரி ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
china, Wuhan Institute, pakistan, pakistan military, bio-warfare, india

புதுடில்லி : இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த, ஆபத்து மிக்க உயிரி ஆயுதங்களை தயாரிக்க, பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு, சீனா எப்போதுமே தலைவலியாக இருக்கிறது. அதிலும், கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், பல நாடுகளும், சீனா மீது கோபத்தில் உள்ளன. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என, அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த மாதம், லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக, சீனாவுக்கு எதிராக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவீடன் உட்பட, பல நாடுகள் போக்கொடி துாக்கியுள்ளன.


latest tamil newsஇந்நிலையில், இந்த நாடுகளின் எதிர்ப்புகளை சமாளிக்க, மிகவும் ஆபத்தான உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளது. இது பற்றி, புலனாய்வு பத்திரிகையாளர், அந்தோணி கிளான், 'கிளாக்சன்' இணையதளத்தில் எழுதியிருப்பதாவது:

'வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி' ஆய்வகம், 'டெஸ்டோ' எனப்படும், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன், ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட, ஆபத்தான உயிரி ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சியில், இருநாடுகளும் இறங்கியுள்ளன.

இதில், மிகவும் ஆபத்தான, 'ஆந்தராக்ஸ்' தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களும் அடங்கும். இதற்காக, வூஹான் ஆய்வகம், பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தான், தன் சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுதளத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு, நோய்க்கிருமிகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும், வூஹான் ஆய்வகம் அளித்துள்ளது.

'இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை துாண்டி விடுவதற்காக, இந்த திட்டத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டுகிறது' என, பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.மேலும், தன் நிலத்துக்கும், மக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கவே, சீனா, அபாயகரமான உயிரி ஆயுதங்கள் ஆராய்ச்சிக்காக பாகிஸ்தானை தேர்ந்தெடுத்துள்ளது.

சீனா - -பாகிஸ்தான் உயிரி ஆயுத திட்டத்தில், சி.சி.எச்.எப்.வி., எனப்படும், ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் குறித்த சோதனை நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
25-ஜூலை-202017:05:51 IST Report Abuse
venkatan இப்பொழுதும்...இதுதான்... இவங்க நாடுகளை கோரானவே முற்றிலுமாக அழித்து ஒழிக் கட்டும்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-202014:26:12 IST Report Abuse
Rasheel உலகத்தின் அழிவை அந்த மார்க்கம் செய்யும் என்பது எல்லாரும் அறிந்ததே. அவை மக்கள் பெருக்கம் மூலமும், மத சண்டைகளின் மூலமும் அரங்கேறும். ஹிட்லர் ஜெர்மனியில் ஒரு மைனாரிட்டி இனத்தை கொலை செய்வதின் மூலம் நிறைவேற்றினான். அதையே பாக்கிஸ்தான் மதம் என்ற போர்வையில் செய்கிறது. தீவிரவாதிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாக்காரன் அதை தனது கம்மி கொள்கை மூலம் உலகை ஆக்கரமிப்பு செய்து நிறைவேற்றுகிறான். இரண்டு பேரின் கொள்கை எல்லாம் ஒன்றுதான். உலகை அழிப்பதே.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-202014:18:48 IST Report Abuse
Rasheel சுதந்திரம் வாங்கிய காலத்தில் பாகிஸ்தானில் ஒரு மதம் என்ற காரணத்திற்காக பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள், குழந்தைகள், முதியவர் லக்ஷ கணக்கானோர். அந்த கதைகளை நாம் கண்ணீரால் தான் எழுத முடியும். இதை போலி பகுத்தறிவு பேசும் சில தமிழர்களுக்கு தெரியாது. பஞ்சாபி, ராஜஸ்தான், ஹிமாச்சல் போன்ற மக்களுக்குத்தான் தெரியும். அல்லது தமிழ்நாட்டு ராணுவ வீரர்களை கேட்டு பாருங்கள்.அவர்கள் காஷ்மீரில் பட்ட கொடுமைகளை கேட்டு பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X