இந்தியா

கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

காரைக்கால்; கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X