இந்தியா

அரசு இடம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி மறியல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்காலில் அரசு இடத்தை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்கால் விழுதியூர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குளத்தை சுற்றி நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு உடந்தையாக உள்ள கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று முன்தினம் விழிதியூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.எஸ்.பி., வீரவல்லபன் மற்றும் நிரவி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 20க்கு மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X