இந்தியா

எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டுஅ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; எம்.ஜி.ஆர்., சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி சட்டசபை அ.தி.மு.க., குழு தலைவர் அன்பழகன் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் எம்.ஜி.ஆர்., கட் அவுட் மற்றும் பேனர்களை ஏந்தியவாறு நேற்று காலை சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். வில்லியனுாரில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். கவர்னர் உரையாற்ற வருகின்ற நேரத்தில் அ.தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர். தொடர்ந்து, அங்கிருந்த டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவாவிடம், எம்.ஜி.ஆர்., சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நான்கு எம்.எல்.ஏ.,க்களும் கையெழுத்திட்ட புகார் மனுவை அளித்தனர். பின், சட்டசபைக்குள் சென்று சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X