ரூ.500 கோடிக்கு மத்திய அரசு உதவி | Dinamalar

இந்தியா

ரூ.500 கோடிக்கு மத்திய அரசு உதவி

Added : ஜூலை 25, 2020
Share

புதுச்சேரி; பேனர்களை ஏந்தியவாறு சட்டசபைக்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர்.பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று காலை பேனர்களை ஏந்தியவாறு சட்டசபைக்கு வந்தனர். மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் பேனரில் இடம் பெற்று இருந்தது. மேலும், ஏழை மக்களுக்கு காங்., அரசு வழங்கிய கொரோனா நிவாரணத் தொகை ஜீரோ என்றும் எழுதப்பட்டு இருந்தது.பின், பேனர்களை வைத்து விட்டு, சபைக்குள் சென்று கவர்னர் உரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பின்னர், சாமிநாதன் கூறியதாவது:கொரோனா தொடர்பாக நாள் முழுவதும் விவாதம் நடத்தியும் ஏழை மக்களுக்கு நிவாரணத் தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது.புதுச்சேரியில் 90 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.1,500 வீதம் ஜன்தன் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தி உள்ளது. 8,500 விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 செலுத்தப்பட்டுள்ளது.உஜ்வாலா சிலிண்டர் திட்டத்தில் 9,000 பேருக்கு இலவச சிலிண்டர் தந்துள்ளனர். மொத்தம் ரூ.500 கோடிக்கு மேல் மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கி உள்ளது.அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் நிவாரணம் எதையும் புதுச்சேரி அரசு அறிவிக்கவில்லை. 2 திட்டங்களை மட்டும் பெயருக்கு அறிவித்துள்ளனர். மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த புதுச்சேரி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X