இந்தியா

சபாஷ்: விபத்து, உயிரிழப்புகள் கணிசமாக குறைவுஅரசின் நடவடிக்கைக்கு கவர்னர் பாராட்டு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 சபாஷ்: விபத்து, உயிரிழப்புகள் கணிசமாக குறைவுஅரசின் நடவடிக்கைக்கு கவர்னர் பாராட்டு

புதுச்சேரி; அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் 2019ம் ஆண்டில் 39 சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது என கவர்னர் தனது சட்டசபை உரையில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரிசட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் கிரண்பேடி நேற்று காலை 9:30 மணிக்கு வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.கவர்னருக்கு மலர்செண்டு அளித்து சபாநாயகர் சிவக்கொழுந்து வரவேற்று சபைக்கு அழைத்து வந்தார். துணை சபாநாயகர் பாலன், சட்டசபை செயலர் முனிசாமி உடனிருந்தனர்.தொடர்ந்து, சட்டசபையில் கிரண்பேடி உரையாற்றினார். கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:l விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல்வேறு மான்யங்களையும் அரசு வழங்கி வருகிறது.l கடந்த 2019 -20ம் ஆண்டில் 49 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் பால், 113.78 லட்சம் முட்டைகள், 14 ஆயிரத்து 635 டன் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.l அரியாங்குப்பத்தில் தாகூர் கலாசார மையம் வரும் பிப்ரவரியில் திறக்கப்படும்.l கூட்டுறவு சர்க்கரை ஆலையை குத்தகைக்கு விடுவது தொடர்பான பணியை கண்காணிக்கவும், செயல்படுத்தவும், ஒப்பந்தப்புள்ளி கோரும் குழு அமைக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.l தரமான கல்வி என்ற அடிப்படையில் நிடி ஆயோக் தர வரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியில் புதுச்சேரி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.l புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழகம் விரைவில் செயல்பட துவங்கும்.l நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் புதுச்சேரி சுகாதாரத் துறை முதலிடத்தை பிடித்துள்ளது.l புகழ்பெற்ற 10 கோவில்களின் வரலாறு பற்றிய விரிவான ஆய்வு செய்வதற்கான பணிகள் பிரெஞ்சு நிறுவனத்தின் மூலம் நடக்கிறது.l புதிய தொழில் கொள்கை-2016 அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 64 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, 36 திட்டங்கள் ரூ.468.42 கோடி முதலீட்டில் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

.l தொழிலாளர் துறை மூலமாக 5 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 576 பேர் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 244 பேருக்கு பணி உறுதி செய்யப்பட்டது.l போலீஸ் துறையில் இணையதள ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.l சட்டரீதியான அனுமதிகள் கிடைத்தவுடன், மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தும் பணிகள் துவக்கப்படும்.l அரும்பார்த்தபுரம் - நடேசன் நகர் புறவழிச்சாலை மற்றும் மேம்பாலத்திற்கான இடத்தை கையகப்படுத்துவதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த இடம் புதிய நில ஆர்ஜித சட்டப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், புதுச்சேரி - வில்லியனுார் இடையிலான புறவழிச்சாலை பணிகள் துரிதப்படுத்தப்படும்.l தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய செயல்திறன் தணிக்கையின் அடிப்படையில், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, அனைத்து யூனியன் பிரதேசங்களுக்குள் முதல் இடத்தை பிடித்துள்ளது.l அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சாலை விபத்துக்கள், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் 2019ம் ஆண்டில் 39 சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.l சாராய வடிசாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கலாசார மையம், அரிக்கன்மேடு அருங்காட்சியகம் ஆகியவை வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும்.l திட்டமிடப்பட்டுள்ள பகுதிக்குள் அதிகமான நகர மையங்களை ஊக்குவித்தல் திட்டம், புதுச்சேரியின் 2036ம் ஆண்டுக்கான விரிவான வளர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி மதகடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய இடங்களில் வளர்ச்சி மையங்களும், தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், சேதராப்பட்டு, காலாப்பட்டில் வளர்ச்சி முனையங்களும் அமைக்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளன.

சட்டசபையில் புதுமைஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவது வழக்கம். இதன்படி, கடந்த 20ம் தேதி காலை 9:30 மணிக்கு, கவர்னர் உரை நிகழ்த்துவார்; மதியம் 12:05 மணிக்கு, முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று சட்டசபை செயலகம் அறிவித்து இருந்தது.பட்ஜெட் மற்றும் மான்யக் கோரிக்கைகள் குறித்த விபரங்களை தனக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும், வேறு தேதி நிர்ணயித்து கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என, கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.

இதற்கு, முதல்வர் ஒப்புக் கொள்ளவில்லை.திட்டமிட்டப்படி, கடந்த 20ம் தேதியன்று காலை சட்டசபை கூடியது. உரையாற்றுவதற்கு கவர்னர் வராததால், கவர்னர் உரையை நிறுத்தி வைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, நடப்பு 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.இந்நிலையில், சட்ட சபையில் உரையாற்ற வருமாறு கவர்னருக்கு மீண்டும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, கவர்னர் உரைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் கவர்னர் உரை நேற்று இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X