இந்தியா

மீனவர் விடுதலை வேங்கை கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள மீனவர்கள் வருமான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்ற மீன் வளத்துறை உத்தரவை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கை அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு நிறுவனர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலர் வெங்கடேசன், துணை பொதுச் செயலர் ரமேஷ், மேற்கு மண்டல அமைப்பாளர் இளங்கோவன், மாநில செயலர்கள் துரை, செந்தில்நாதன், நாக ராஜ், அருணாசலம், கார்த்திகேயன், பிரபு, ஞானமணி, வடக்கு மண்டல அமைப்பாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது, மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள மீனவர்கள் வருமான சான்றிதழ் அளித்தால் தான் தடைக்கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணம் பெற முடியும் என்ற மீன்வளத் துறையின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் வழங்குவது போல் புதுச்சேரி பைபர் படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X