இந்தியா

மாற்றுத்திறனாளிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; வாழ்வாதாரம் கேட்டு மாற்றுதிறனாளிகள் போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி அனைத்து மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் வாழ்வாதாரம் கேட்டு சட்டப்சபை, கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலையில் பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தினர், தொடர்ந்து அங்கே மாற்றுதிறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில், கொரோனா பரவலால் வாழ்வாதாரம் இழந்த மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆணைப்படி மாற்றுதிறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீட்டினை சிறப்பு ஆள் தேர்வு மூலம் மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.100 சதவீத குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ.7,000, 75 சதவீத குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ.5,000, 40 சதவீத குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ.3,000 நிவாரண உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். மாதந்தோறும் 15 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு தனி நல வாரியம் வேண்டும். சட்டசபையில் அறிவித்தபடி 1000 ரூபாய் தீபாவளி பண்டிகைக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X