இந்தியா

புதிதாக 97 பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனாவிற்கு மூதாட்டி ஒருவர் உயிரி ழந்தை தொடர்ந்து பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் நேற்றுமுன்தினம் 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 2,421 பேராகவும், பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.நேற்று 647 பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2513 ஆக அதிகரித்துள்ளது.தொற்று ஏற்பட்ட 97 பேரில், கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் -61; ஜிப்மர்- 29; கோவிட் கேர் சென்டரில் -5 மாகி மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொற்று பாதித்த 2513 பேரில் இதுவரை 1483 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி கதிர்காமம் கோவிட் மருத்துமனையில் 491 பேர், ஜிப்மரில் 268 பேர், கோவிட் கேர் சென்டர்களில் 147 பேர், காரைக்காலில் 52 பேர், ஏனாமில் 37 பேர், மாகியில் ஒருவர் என மொத்தம் 996 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்.மூதாட்டி பலிவில்லியனுார் கணுவாப்பேட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டி கடந்த 22ம் தேதி உடல்நிலை பாதித்து ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். மறுநாள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.பரிசோதன முடிவுகள்மாநிலத்தில் இதுவரை 33,658 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 30, 648 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. 312 பேரின் ரிசல்ட் வர வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X