இந்தியா

சபையில் கவர்னர் கிரண்பேடி உரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கவர்னர் உரையை புறக்கணித்து, சபையில் இருந்து அமைச்சர், காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் கிரண்பேடி நேற்று காலை வந்தார். அவரை, சபாநாயகர் சிவக்கொழுந்து வரவேற்று அழைத்து வந்தார்.சபையில் கவர்னர் உரையாற்ற துவங்கியவுடன், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கவர்னர் உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன், முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன், காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி ஆகியோரும் வெளியேறினர்.இதில், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார்.சபையில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.,க்கள் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர்.கவர்னர் உரையாற்றிவிட்டு புறப்பட்டவுடன், ஜெயமூர்த்தியை தவிர மற்றவர்கள் சபைக்கு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X