இந்தியா

சப் கலெக்டரிடம் தி.மு.க., மனு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சுல்தான்பேட்டையை வருவாய் கிராமமாக அறிவிக்ககோரி, தி.மு.க., தெற்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுாஸ், வில்லியனுார் சப் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.மனு விபரம்:வில்லியனுார் தொகுதியில் உள்ள சுல்தான்பேட்டையில் பெருவாரியான மக்கள் வாழ்த்து வருகின்றனர். தற்போது மாணவர்களின் மேற்படிப்புக்காக சான்றிதழ்கள் பெற ஆன் லைன் தொடர்பு கொள்ளும் போது, எங்கள் ஊர் குரும்பாப்பேட் வருவாய் கிராமத்தில் உள்ளடங்கியுள்ளது.அரசு தரப்பிலும் சரி, பொருளாதார புழக்கத்திலும் சரி, குடியிருப்புகள் கணக்கெடுப்பிலும் சரி சுல்தான்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் மக்கள் தொகையோடு வாழ்த்து கொண்டிருக்கிறோம். ஆகவே, அரசு கெசட்டில், சுல்தான்பேட்டையை வருவாய் கிராமம் என அறிவிப்பதற்கு, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X