இந்தியா

எம்.ஜி.ஆர்., சிலை அவமதிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

வில்லியனுார்; வில்லியனுாரில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு அணிவித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் தலைமையில் அ,தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வில்லியனுார் புறவழிச்சாலை, நான்கு முனை சந்திப்பு மூலக்கடையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., சிலையில் நேற்று முன்தினம் காவி துண்டு போர்த்தப்பட்டிருந்தது. இது சமூகவலைதளத்தில் வைரலாகியது.இதனைக் கண்டித்து நேற்று காலை 10:00 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் 25 பேர் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பழனிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையேற்று மறியலை கைவிட்டு, எம்.ஜி.ஆர்., சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு கலைந்து சென்றனர்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூக இடைவெளி இல்லாமல் மக்களை திரட்டி மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீசில் புகார்எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு அணிவித்து அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X