இந்தியா

கொரோனா விழிப்புணர்வு காணொலி புதுச்சேரி பல்கலையில் வெளியீடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா தொடர்பான பிரசார விழிப்புணர்வு காணொலி மற்றும் சுவரொட்டிகளை புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் வெளியிட்டார்.கொரோனா விழிப்புணர்வு பற்றிய 5 தமிழ் காணொலிகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள், புதுச்சேரி பல்கலைக்கழக கல்விசார் பல்லுாடக ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் (பொறுப்பு) ராதிகா கண்ணா வரவேற்றார். துணை வேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கி, கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் மற்றும் சமுதாய ஓழுங்கு முறைகளை பின்பற்றுவது குறித்த 3 காணொலிகளையும், நிகழ்கலை துறை ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு நாடக காணொளியை வெளியிட்டார்.கொரோனா பொது விழிப்புணர்வு மற்றும் முன்னணி சுவரொட்டியை சி.இ.சி., இயக்குனர் ஜெகத்பூஷன் நட்டாவும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியும் முறைகள் பற்றிய காணொலியை சி.இ.சி., இயக்குனர் நாகேஸ்வர நாத் வெளியிட்டனர்.ஊடகத்துறையின் புலமுதல்வர் ராமையா, கை கழுவும் சரியான முறை பற்றிய காணொலி மற்றும் பொது இடங்களில் புகையிலை, எச்சில் துப்பாமல் இருக்கும் பழக்கத்திற்கான சுவரோட்டிகளை வெளியிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X