இந்தியா

பட்டமேற்படிப்பு மையத்தில் சேர

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.டி.டி.எம் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் மேற்படிப்பு மையத்தில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகள் உள்ளன.எம்.எஸ்.சி., பிரிவில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், எம்.காம்., எம்.டி.டி.எம்., உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகளில் மொத்தம் 710 இடங்கள் உள்ளன. இந்த மேற்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் https://kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ஐந்து செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைந்து வரும் 7ம் தேதிக்குள் முன்பாக, இயக்குனர்,காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், லாஸ்பேட்டை,புதுச்சேரி-605008 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.புதுச்சேரி மாணவர்களுக்கு விண்ணப்பம் கட்டணம் இல்லை. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் நேரில், சென்று டிகிரி படிப்பதற்கான அடையாள அட்டை காண்பித்து விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டை பெற்றுக்கொள்ளலாம் என கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X