இந்தியா

போலி முகவரியில் கொரோனா நோயாளி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா பரிசோதனை செய்து கொள்வோர்களில் சிலர் போலி முகவரி கொடுப்பதால், அவர்களுக்கு தொற்று உறுதியானால், கண்டு பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், கருவடிக்குப்பம், மேட்டுத் தெரு முகவரி கொடுத்து 39 வயது நபர் பரிசோதனை செய்து கொண்டார். அவரது உமிழ்நீர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.அதனையொட்டி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர சுகாதாரம் மற்றும் வருவாய் அதிகாரிகள் அந்த நபர் கொடுத்த முகவரிக்கு சென்றனர். அப்போது அவர் கொடுத்த முகவரி மற்றும் மொபைல் எண்ணும் போலி என்பது தெரிய வந்தது.கொரோனா தொற்று உறுதியான நபர் யார்? அவர் தற்போது எங்கு உள்ளார் என தெரியாமல், அவரால் நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.இது குறித்து உழவர்கரை தாசில்தார் குமரன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து போலி முகவரி கொடுத்த நபரை தேடிவருகின்றனர்.கடந்த 21ம் தேதி நடந்த முகாமில் போலி முகவரி கொடுத்த 40 வயது கொரோனா நோயாளியை டிநகர் போலீசார் தேடிவருகின்றனர்.போலி முகவரியை தடுக்க வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் பரிசோதனையின் போது அவர்களது இருப்பிட முகவரிக்கான ஆவணங்களையும், மொபைல் எண்ணை சரிபார்க்க போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X