இந்தியா

கந்த சஷ்டி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை: முதல்வர் நாராயணசாமி உறுதி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கந்த சஷ்டி கவசத்தை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை என முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் தெரிவித்தார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியபோது அ.தி.மு.க., அன்பழகன் எழுந்து வில்லியனுாரில் எம்.ஜி.ஆர்., சிலை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு பதிலளித்த முதல்வர், எம்.ஜி.ஆர்., சிலை அவமதித்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.அப்போது குறுக்கிட்ட பா.ஜ., சாமிநாதன்: கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தவர் இ--பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கு வந்துள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் கந்தசாமி: சில தினங்களுக்கு முன் ஒருவர் என்னை மொபைலில் தொடர்பு கொண்டு தவறாக பேசி, அதனை உடனே வாட்ஸ் ஆப்பில் பரப்புகிறார். முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்து தவறான தகவலை பரப்புகின்ற, மிரட்டுகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.பாஸ்கர்(அ.தி.மு.க.,): சுய விளம்பரத்துக்காக எம்.எல்.ஏ.,க்களை ஒருமையில் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.முதல்வர்: கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த நபர்கள் கட்டுப்பாடுகளை மீறி குறுக்கு வழியில் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் எவ்வாறு புதுச்சேரிக்குள் வந்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.கந்த சஷ்டி கவசத்தை யார் விமர்சனம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. எம்மதமும் எங்களுக்கு சம்மதம். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை அவதுாறாக பேசுகின்றனர். மிரட்டும் வேலையை பார்க்கின்றனர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக சபாநாயகரும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.அன்பழகன் (அ.தி.மு.க.,): இது போன்றவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.அரசு கொறடா அனந்தராமன: முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாண்புமிக்க பதவியில் உள்ளவர்கள். எனவே தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சபாநாயகர்: உண்மையை காட்டிலும் பொய் தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. எம்.எல்.ஏ.,க்கள் நல்ல கருத்துகளை பதிவு செய்துள்ளனர். போலீஸ் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.முதல்வர்: சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேகமாக செயல்படவும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X