இந்தியா

புகார்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

அரசின் திட்டங்களை முடக்கும் வேலைகள் நடக்கிறதுஎதிர்த்து போராடி கொண்டுள்ளோம் என்கிறார் முதல்வர்புதுச்சேரி, ஜூலை 25-'அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் முடக்கும்வேலைகள் நடந்து கொண்டுள்ளது; அவற்றை எதிர்த்து போராடி கொண்டு இருக்கிறோம்' என, முதல்வர் நாாயணசாமி கூறினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் பட்டியலிட்டு கூறுவதுதான் கவர்னர் உரையாகும். அடுத்த ஆண்டில் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை சபையில் வைப்பதுதான் பட்ஜெட். அரசின் செயல்பாடுகளை யும், சாதனைகளையும் பட்டியலிட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பட்ஜெட் தொகையை 75 சதவீதத்துக்கு மேல் செலவிட்டது கிடையாது. ஆனால், நிதி பற்றாக்குறை இருந்த போதும், தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராவிட்டாலும் 93 சதவீதம் தொகையை செலவு செய்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.மத்தியில் மாற்று அரசு இருந்தாலும், பல துறைகளில் வெற்றி கண்டுள்ளோம்; பல துறைகளில் முதலிடத்தில் உள்ளோம். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகம் தொடர்பாக மத்திய சீர்திருத்தத் துறை ஆய்வு மேற்கொண்டது.இதில், யூனியன் பிரதேசங்கள் அளவில் மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், நீதி, சட்டம் ஒழுங்கு ஆகிய துறைகளில் முதலிடத்தை பிடித்துள்ளோம். மத்திய பா.ஜ., அரசு நம்மை அங்கீரித்துள்ளது. சிறப்பாக செயல்பட்டு சாதித்துள்ளோம். அகில இந்திய அளவில் 16 அம்சங்களில் ஒட்டு மொத்தத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளோம்.ஜல்சக்தி அமைச்சகம் திட்டத்தில் துாய்மையான மாநிலமாக தேர்வாகி உள்ளோம். இந்திய அளவில் கூனிச்சம்பட்டு பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. தொடர்ந்து பல விருதுகளை பெற்று இருப்பது, புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு உதாரணம். சிறப்பு பொருளாதார மண்டல நிலத்தை தொழில் வளர்ச்சிக்கு தருவதில் தடை ஏற்படுத்தினர். சுற்றுலா திட்டத்தை வகுத்தோம் தடுத்து நிறுத்த வேலை பார்த்தனர். பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்களுக்கு முறையே ரூ.8 கோடி, ரூ.7 கோடி மான்யம் ஒதுக்கினோம். அந்த தொகை இ.எஸ்.ஐ.,க்கு முழுமையாக தரப்பட்டது. கவர்னர் தலையீட்டால் அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு தர முடியவில்லை.ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிதி ஒதுக்கினோம்; தடுத்து நிறுத்தப்பட்டது. அதுபோல, ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில்களுக்கு பணம் ஒதுக்கினோம்; அதுவும், தடுத்து நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளம் தரவும், நலன் காக்கவும் நடவடிக்கை எடுத்தாலும் தடுத்து நிறுத்தும் வேலை நடக்கிறது.தடைகளை தாண்டி 11 சதவீதம் வளர்ச்சியை எட்டி உள்ளோம்.பட்ஜெட்டை எவ்வளவு சிரமங்களுக்கு, போராட்டங்களுக்கு இடையில் தயார் செய்தேன் என்பதை நாளை (இன்று) கூறுகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பெயர் வந்து விடக்கூடாது என தடுத்து நிறுத்தும் வேலையை செய்கின்றனர்.அரிசியை ரேஷன் கடை மூலமாக தர வேண்டும் என பேசினோம். அரிசியாக தரலாம் என, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஒப்புதல் தெரிவித்தார். அதை தடுத்து நிறுத்தினர். ஒவ்வொரு துறையாக அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் முடக்கும் வேலைகள் நடந்து கொண்டுள்ளது. அவற்றை எதிர்த்து போராடி கொண்டுதான் இருக்கிறோம்.நியாயம் வெல்லும்; உண்மைதான் நிற்கும். பொறுத்தவர் பூமி ஆள்வார். பொங்கியவர் நிலை என்ன ஆனது பாருங்கள். மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது.சட்டசபையின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும். சட்டசபையை தள்ளி வைக்க வேண்டும் என நெருக்கடி ஏற்பட்டது. சட்டசபையை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வேன் என்றேன். சபையை தள்ளி வைப்பதற்கு ஒப்புக் கொண்டு பணிந்து போனால் முதல்வராக இருக்க தகுதி இல்லாதவன் ஆவேன். சட்டசபையின் மாண்பை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X