இந்தியா

சுகாதார பணியாளர்களுக்கு சம்பள உயர்வு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்காதது வருத்தம் அளிப்பதாக சாமிநாதன் எம்.எல்.ஏ., பேசினார்.கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பா.ஜ.,எம்.எல்.ஏ.,சாமிநாதன் பேசியதாவது:கொரோனா பணியில் குடும்பத்தை பொருட்படுத்தாமல் பணியாற்றிய டாக்டர்கள் செவிலியர்களுக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார், இதனை நான் வரவேற்கிறேன், பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரதுறை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, அளிக்கப்பட்டுள்ளதுஆனால் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.மாநிலத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது கவர்னர் உரைக்கு புறம்பாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் 1.25 லட்சம் பேர் உள்ளதாக கூறி உள்ளீர்கள். இதுவரை 50 ஆயிரம் பேருக்குதான் கார்டு சென்றுள்ளது.பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு டோக்கன் கொடுத்துள்ளோம். இத்திட்டத்தை வெகுவிரைவில் செயல்படுத்த வேண்டும். இந்த கவர்னர் உரை 90 சதவீதம் ஒட்டுமொத்தமாக பிரதமாின் திட்டங்களை பிரதிபலிப்பதால் அதனை வரவேற்கிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X