இந்தியா

மருத்துவ நிதியுதவி எப்போது வழங்கப்படும்? சிவா எம்.எல்.ஏ., சரமாரி கேள்வி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பாக கவர்னர் உரையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்' என, சிவா எம்.எல்.ஏ., கூறினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில் பிரச்னைகளை கவர்னர் உரையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அவற்றை முழுமையாக மறந்தது நன்றாக இல்லை. பொதுத் துறை நிறுவனங்களின் நிலையையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அப்போதுதானே அவருக்கு நினைவூட்டுவது மாதிரி இருக்கும்.ஒரே ஒரு தொகுதியான ஏனாம் தொடர்பாக 22 அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. அதை அமைச்சரின் திறமை என்று கூறலாம்; முதல்வரின் பாசம் என்றும் கூறலாம். ஆனால், உருளையன்பேட்டை உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள எந்த தொகுதியும் இடம் பெறாதது ஏன்?சர்க்கரை ஆலை விவகாரத்தில், விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். பாப்ஸ்கோ, பாசிக், ஸ்பின்கோ போன்றவற்றுக்கு உயிர் தருவது குறித்து கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. 10 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். இதை உரையில் இடம் பெற செய்திருந்தால் கவர்னருக்கு ஞாபகம் வந்திருக்கும்.இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலம் புதுச்சேரி மாநிலம்தான். இன்று வரை 25 சதவீதம் அரிசி மக்களுக்கு சென்று சேரவில்லை. ரேஷன் கடை இருந்தால் மக்கள் அங்கே சென்று கேட்பார்கள்.தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் உள்ளது ஏன்?மருத்துவ செலவுக்கு உதவி கேட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு எப்போது பணம் தரப்படும்? பலர் இறந்து கொண்டுள்ளனர். உடனடியாக பணத்தை தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னரை குறை கூறாமல் உங்களால் முடிந்த விஷயங்ளை செய்து தாருங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X