இந்தியா

தேவையான நிதியை கவர்னர் வாங்கித் தரவில்லை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி:'மாநிலத்துக்கு தேவையான நிதியை கவர்னர் வாங்கி தரவில்லை' என, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., பேசினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:மக்களுக்கு தொல்லை தருவதையே வேலையாக வைத்துள்ளனர்.

பட்ஜெட் கோப்பு அனுப்பினால், 15 நாட்கள் வைத்திருக்கிறார். மத்தியில் ஒரு மாதம் வைத்திருந்தனர். இதுதான் இவர்கள் நிர்வாகம்.நமது கவர்னர் நமது மாநிலத்துக்கு தேவையான நிதியை வாங்கி தரவில்லை. ஆனால், எதை எல்லாம் செய்யக் கூடாதோ அதைதான் செய்கிறார். பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தபோது, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்காது என்றார். பின், கையெழுத்து போடுகிறார். இதுதான் அவரது நிலைப்பாடு.தனிப்பட்ட மனிதருக்கு 7 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தில் இருந்து செலவு செய்யப்படுகிறது. ஆனால், மக்கள் நலத் திட்டங்களுக்கு தடையாக இருக்கிறார். மக்களுக்கு அவர் நன்றியோடு இருக்க வேண்டும். அவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும். கவர்னருக்கு நன்றி சொல்ல மறுத்து அமர்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X