இந்தியா

4 ஆண்டு கால காங்., அரசின் சாதனை என்ன?

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'கவர்னர் மீதே பழி போட்டுக் கொண்டிருக்காமல், மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும்' என, அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:நான்கு ஆண்டுகளாக மோதல் போக்கால், மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எதையும் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. நான் பொய் பேச மாட்டேன் என்று கவர்னர் கூறுவார். இந்த அரசின் குறைகளை அக்கு வேறு ஆணி வேறாக தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, முதல்வர், அமைச்சர்களை எப்படி இன்று பாராட்டுகிறார்? நேற்று வரை தாறுமாறாக பேசிவிட்டு இன்று பாராட்டுகிறார் என்றால் இடையில் நடந்தது என்ன?கடந்த 4 ஆண்டு காலம் இந்த அரசின் இருண்ட காலம். இதற்கு கவர்னரும் காரணம்.மதுபானங்கள் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால், 750 கோடியில் இருந்து 1000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இதை அரசு செயல்படுத்தலாமே. இதை, கவர்னர் தடுக்கிறாரா? மதுபான கொள்கையில் அரசு தள்ளாட்டத்துடன் உள்ளதால் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.நான்கு ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கிறீர்கள். வறுமையை ஒழித்தோம்; குடிசையில்லா மாநிலமாக்கினோம்; வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தோம் என எந்த விஷயத்திலாவது சாதனை படைத்தோம் என கூற முடியுமா? 9,000 பணியிடங்களை நிரப்பப் போகிறோம் என இப்போது கூறுகிறீர்கள். பொய்க்கு அளவே இல்லையா? நாங்கள் சொல்லிட்டோம்; கவர்னர் ஒப்புக் கொள்ளவில்லை என கூறுவதால் யாருக்கு என்ன நன்மை? மக்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும். காலியிடங்களை நிரப்பவில்லை. இளைஞர்களின் படிப்புக்கு தகுந்தாற்போல வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோமா? கடந்த 3 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் பள்ளிக் கல்வி துறைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு மாணவர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ்., படிக்க சென்றுள்ளார். எனவே, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என கடிதம் தந்தோம். பதில் இல்லை.தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 50 சதவீதம் இடங்களை பெற சட்டம் வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பஞ்சாலைகளை நவீனப்படுத்த நிதி பெற்று வருகின்றனர். கவர்னர், தலைமைச் செயலர், செயலர்கள் எதற்கு உள்ளனர்? பொதுமக்களுக்கு நாம் பணி செய்த காலத்தில் நன்மை செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்க வேண்டும்.உணவு பாதுகாப்பு சட்டப்படி இன்னும் 42 ஆயிரம் பேருக்கு சிவப்பு ரேஷன் கார்டு தரலாம். இதை செய்தால் மத்திய அரசு வழங்கும் அரிசியை கூடுதலாக பெற முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.அமைச்சர் கந்தசாமி பேசும்போது, 'சிவப்பு ரேஷன் கார்டு தொடர்பாக தலைமைச் செயலர், செயலர், எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேசி முடிவு எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X