இந்தியா

23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேவையா?: அமைச்சர் கந்தசாமி ஆவேசம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'புதுச்சேரியைவிட மக்கள் தொகை அதிகம் உள்ள பக்கத்து மாவட்டங்களை ஒரே ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வாகம் செய்கிறார்; இங்கே 13 லட்சம் மக்களுக்கு 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர்' என, அமைச்சர் கந்தசாமி கூறினார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: நிர்வாகி என்ற வார்த்தையை சட்டசபை மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டில் எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும்தான் அதிகாரம் என்றால் என்ன அர்த்தம்? மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். எத்தனை இரவுகள் முதல்வர் துாங்கவில்லை என்பது தெரியுமா? நானும் பல இரவுகள் துாங்காமல் இருந்தேன். பதவியே போனாலும் பரவாயில்லை; குறிப்பிட்ட தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றேன். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் கெஞ்சும் நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதிகளான நாம் ரூ.45 ஆயிரம் சம்பளம் வாங்குகிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் நினைத்து பார்க்க வேண்டும். மேலும், அவர்களுக்கு எல்லாம் கிடைத்து விடுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூறுவதை அதிகாரிகள் கேட்பது கிடையாது. இனி, வாரம் ஒருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தி செலவுகளுக்கு உடனடியாக ஒப்புதல் தருமாறு முதல்வர் உத்தரவிட வேண்டும். நமது உரிமையை பெற வேண்டும். உயிரை துச்சமென நினைத்து உழைக்கும் முதல்வரால் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. புதுச்சேரியைவிட மக்கள் தொகை அதிகம் உள்ள பக்கத்து மாவட்டங்களை ஒரே ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வாகம் செய்கிறார். இங்கே 13 லட்சம் மக்களுக்கு 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் வீட்டு பணத்தை தரவில்லை. மக்களை மறக்கக் கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X