கொரோனா முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் தனிமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் தனிமை

Added : ஜூலை 25, 2020
Share

ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, 140 இடங்களில், 25 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,'' என, கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 539 பேர் கொரோனாவால் பாதித்து, 396 பேர் வீடு திரும்பினர். நேற்று முன்தினம் வரை, 69 ஆயிரத்து, 293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், 140 இடங்களில் உள்ள வீடுகளில், 25 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் எவருக்கும் தொற்று இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்த, 22 பேருக்கு தொற்று இருந்தது. மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைவாக இருக்க, செக்போஸ்ட்களை கவனமாக வைத்துள்ளோம். பி.சி.ஆர்., பரிசோதனையுடன் வருவோரை மட்டும் அனுமதிக்கிறோம். அல்லது, அவ்வாறு வருவோருக்கு பரிசோதனை எடுத்து, தனிமைப்படுத்தி, 'நெகட்டிவ்' என வந்தால் மட்டுமே வீடு செல்ல அனுமதிக்கிறோம். கொரோனா உறுதியாகும் நபரிடம், அவரது தொடர்பு, எங்கிருந்து, யாருடன், எந்த வாகனத்தில் வந்தார், யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது என, 60 கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் சந்தேகப்படும் நபர்களுக்கு, பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X