பொது செய்தி

தமிழ்நாடு

6 மாத குழந்தைக்கும் தொற்று: மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை 564 ஆனது

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 564 ஆனது. ஆறு மாத குழந்தைக்கும் தொற்று பாதித்தது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 539 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக, 25 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை, 564 ஆனது. இதில் ஈரோடு மாநகர் பெருமாள் நகர், வேலன் நகர், மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த-18 பேர், கொடுமுடி, குருவரெட்டியூர், அத்தாணி, சத்தியமங்கலம் பகுதிகளில் தலா ஒருவர், கோபியில் மூவர் என, 25 பேர் கண்டறியப்பட்டனர். இதில், 12 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள், ஆறு மாத குழந்தையும் அடங்கும். இதுவரை, 416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 140 பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X