பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் யூனியனில் கவுன்சிலர்கள் தர்ணா

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஈரோடு: நிதி ஒதுக்காததால், பவானிசாகர் யூனியன் அலுவலக கேட்டை பூட்டி, தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பவானிசாகர் யூனியனில், 13 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஏழு பேரில், சரோஜா என்பவர் தலைவராக உள்ளார். யூனியனுக்கு நிதி ஒதுக்காததால், எந்த பணியும் நடக்கவில்லை. நேற்று யூனியன் கூட்டம் நடப்பதாக அறிவித்தனர். கூட்டத்துக்கு வந்த தி.மு.க., கவுன்சிலர்கள் ருக்குமணி, சவுந்தரராஜன், கலைசெல்வி, மூர்த்தி, பூங்கொடி ஆகியோர், யூனியன் அலுவலகம் முன் கூடினர். ஏழு மாதமாக எந்த பணியும் நடக்காததால், மக்களை சந்திக்க முடியவில்லை என குற்றம் சாட்டினர். பின், யூனியன் அலுவலக கேட்டை இழுத்துப்பூட்டினர். அலுவலக வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி, பேச்சுவார்த்தை நடத்தினார். யூனியன் பொது நிதியில் பணம் இல்லாததால், தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்படவில்லை. மாநில நிதிக்குழு மானியத்திலும் நிதி வரவில்லை. நிதி கேட்டுள்ளோம். நிதி வந்ததும், தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்படும், என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். பத்து நாட்களுக்குள் டெண்டர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய கவுன்சிலர்கள், தர்ணாவை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X