அந்தியூர்: சர்க்கரை ஆலையை கண்டித்து, ஆப்பக்கூடலில் விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்பக்கூடலில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது ஆறு மாதங்களுக்கு முன், கொள்முதல் செய்த கரும்புக்கான பணத்தை, விவசாயிக ளுக்கு கொடுக்கமால் ஆலை நிர்வாகம், காலதாமதம் செய்வ தாக கூறி, 30க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், கரும்பு சோகையை கையில் ஏந்தியபடி, ஆலை முன், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளாக பயிர்க்கடனாக பிடித்த, 10 கோடி ரூபாயை, விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தவில்லை. லாப பங்கை விவசாயிகளுக்கு வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆலை நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி, கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.