சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி, 10வது வார்டு, கொத்தங்காடு முதல் வீதி, 30 வயது ஆணுக்கு, கொரோனா தொற்று, நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மனைவி, மூன்று வயது மகள், மாமியாருக்கு, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும், 29 குடும்பத்தை சேர்ந்த, 103 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். சென்னிமலை டவுனில் இதுவரை, கொரோனா தொற்று பாதிக்கவில்லை. முதல் முறையாக, ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
* பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், சிப்காட்டில் வேலை செய்வதற்காக, சில நாட்களுக்கு முன் வந்தார். ஈங்கூர் அருகே வெட்டுக்காட்டுவலசில் தங்கினார். மாவட்டத்துக்குள் நுழையும்போதே, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. ஈங்கூர் பகுதியில் இதுவரை, ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், சிப்காட் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.