பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை: கொடுமணலில் அகழாய்வு பாதிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சென்னிமலை: சென்னிமலையில் பலத்த மழை பெய்ததால், கொடுமணலில் நடந்து வரும், அகழாய்வு பணி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை அருகே, நொய்யல் ஆற்றங்கரையில், கொடுமணல் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில், 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் கல்லறை, அணிகலன்கள் தயார் செய்த தொழிற்கூடம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை பகுதியில், முதுமக்கள் தாழி பல்வேறு அளவுகளில் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, சென்னிமலை பகுதியில் மாலையில் பலத்த மழை பெய்கிறது. கொடுமணல் பகுதியிலும் மழை கொட்டியதால், ஆய்வுப்பணி பாதிக்காமல் இருக்க, தோண்டப்பட்ட குழிகள் மீது, தார்ப்பாய் போட்டு மூடப்பட்டது. ஆனால், பலத்த காற்று வீசியதால், தார்ப்பாய்கள் பறந்து, குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சேறு, சகதியாக உள்ளதால், அகழாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X