பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி 18ல் தீரன் சின்னமலை விழா ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஈரோடு: ''ஆடி,18ல் தீரன் சின்னமலைக்கு, வழக்கம்போல் அரசு விழா நடக்கும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோட்டில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் பயிர் கடன் அளவுகள் கையேடு வெளியிடுதல், கடனுதவி வழங்குதல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் கல்விக்கடன், மகளிர் குழு கடன், சிறு வணிக கடன் என, 35.57 லட்சம் ரூபாய்க்கு கடன் வழங்கி, பயிர் கடன் அளவுகள் கையேட்டை, அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட, அமைச்சர் கருப்பணன் பெற்றுக் கொண்டார். பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், நபார்டு வங்கி உதவியுடன், ஒரு லட்சம் ரூபாய்க்கு கறவை மாடு வாங்கினால், 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பயிர் கடன், 1,000 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த, ஏப்.,1 வரை, 109 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, ஆன்லைன் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். இது தற்காலிகமானது. ஆடி, 18ல் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை, மணி மண்டப வளாகத்தில், வழக்கம்போல் அரசு விழா நடக்கிறது. பால் சொசைட்டிகள் பாலை வாங்க மறுப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. ஈரோடு ஆவினில் தினமும், 2.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, விற்பனை செய்யலாம். தனியார் கொள்முதல் குறைவால், 3.20 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, குளிர் சாதன கிடங்கில் இருப்பு வைக்கிறது. இருப்பினும், புகார் இருக்கும் இடங்களில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X