பாதிப்புக்கு ஆளான நகை கடைக்காரர் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதிப்புக்கு ஆளான நகை கடைக்காரர் பலி

Added : ஜூலை 25, 2020
Share

ஆத்தூர்: 'கொரோனா' பாதிப்புக்கு ஆளாகி, குணம் அடைந்த, நகை கடை உரிமையாளர் பலியானார். ஆத்தூர், ராஜாஜி காலனியைச் சேர்ந்தவர், 68 வயது ஆண்; கடைவீதியில் நகை கடை நடத்தி வந்தார். கடந்த ஜூன், 20ல், கொரோனா தொற்று ஏற்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட இவர், சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடன் பழகியதில், அவரது குடும்பத்தினர், கடையில் பணிபுரிந்தவர் என, 20 பேர், 'கொரோனா'வில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X