பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா: இதுவரை 2,732 பேர் பாதிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், புதிதாக, 122 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 2,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், மாநகர் எல்லைகளில் நடக்கும் பரிசோதனையில், தொற்றுக்கு ஆளாகும் நபர்கள், சேலம் அரசு மருத்துவமனையில், தனிமையில் உள்ளனர். அவர்களில், சேலத்தில், 15 பேர், கள்ளக்குறிச்சி, 2, சங்ககிரி, ராசிபுரம், பெரம்பலூர், வேப்பம்தட்டை, ஆத்தூர், சங்கராபுரம், சின்னசேலம், ராஜாபாளையம் தலா ஒருவர் என, 25 பேர் குணம் அடைந்ததால், நேற்று, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று புதிதாக, 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில், 64 பேர், இடைப்பாடி, 10, வீரபாண்டி, ஆத்தூர், தலா, 5, காடையாம்பட்டி, 4, தலைவாசல், 3, மகுடஞ்சாவடி, மேட்டூர், சங்ககிரி, தலா, 2, கொங்கணாபுரம், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலா ஒருவர். சென்னை, விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 2, தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், வேலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தலா. ஒருவர். உ.பி., மாநிலம் ஒருவர் என, 122 பேர், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில், 357 பேர் உள்ளனர். மாவட்டத்தில், இதுவரை, 2,732 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மூதாட்டி பலி: சேலம், பொன்னம்மாபேட்டை, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 65 வயது மூதாட்டிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி, கடந்த, 23 காலை, 7:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டவர், நேற்று காலை, 3:15 மணிக்கு இறந்தார். அவர், ஏற்கனவே, நீரிழிவு நோயால் அவதிப்பட்டவர். இவருடன் சேர்த்து, கொரோனாவால் இறந்தவரின் எண்ணிக்கை, 27 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X